ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நொய்யலை மீட்க பொதுமக்கள் கோரிக்கை


கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குவது, நொய்யல் ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.



இதே நதியில், 32 காட்டாற்று ஓடைகள் கலக்கின்றன. கோவையைச் சுற்றியுள்ள, 19 குளங்களை நிறைத்த பின், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 160 கிலோ மீட்டர் பயணித்து, நொய்யல் என்ற கிராமத்தில், காவிரியில் கலக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.



நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இவற்றில், வாலாங்குளத்தில் இருந்த சில நூறு வீடுகள் மட்டும் அகற்றப்பட்டு, அங்கிருந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் தரப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு குளங்கள், ஆற்றுப்பாதைகள், வாய்க்கால் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நொய்யல் நதியில் மீண்டும் அத்துமீறி  ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருகிறது.

சில அரசியல்வாதிகளின் பெயர்களை கூறியே இவ்வாறான தவறுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் கடிதம் அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் இருந்து நொய்யலை மீட்கவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....