ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் டெபாசிட் வாங்குவதே சந்தேகம் -ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் பெறுவதே சந்தேகம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இன்று கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு சேலம் இரும்பு ஆலையை தனியார் மையாமாக மாற்றகூடாது. லாபகரமாக நடக்கும் இந்த இரும்பு ஆலையினை தனியாருக்கு கொடுத்தால் சேலத்தில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடக்கும்.

ஆர்.கே. நகரில் தி.மு.க. அமோக வெற்றி பெரும். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். 

மே 16-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவ்வாறு நடைபெறுமானால் ஆளும் கட்சியால் ஒரு பஞ்சாயதில் கூட வெற்றி பெற முடியாது. 

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் டெபாசிட் வாங்குவதே சந்தேகம்.  அத்தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது தமிழக தேர்தல் ஆணையம் அலட்சிய போக்கை கைவிட்டு பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும்  பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...