கோவையில் வரும் மார்ச் 26-யில் முன்னாள் படைவீரர் திரளணி

கோவை மாவட்டம், காளப்பட்டி சாலை, சிட்ரா அருகில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் முன்னாள் படைவீரர்கள் திரளணி நடைபெறவுள்ளது. 

அன்றைய தினம் காலை 8 மணியளவில் துவங்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தென்பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் கி.எம்.ஹரீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் போர் விதவையர் குறைகளை மனுக்களாக தெரிவித்து பயனடையலாம்.

இம்முகாமில், சென்னை இராணுவ மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாமும் நடைபெறும். இதில், பல்வேறு படை ஆவணகாப்பகங்கள், வங்கிகள், சென்னையில் உள்ள இராணுவ உதவி மையத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்கவுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருதல் அவசியம். 

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் படைவீரர் நல அலுவலகம் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....