கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இரும்பு வியாபாரியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை உக்கடம் அடுத்த பிலால் எஸ்டேட் பகுதியை  சேர்ந்த அமீது என்பவரது மகன் பரூக். உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் பரூக்கிற்கு 3 ஆம் வகுப்பில் பயிலும் மகள் மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.



இந்நிலையில் நேற்றிரவு பணி முடித்து வீட்டிலிருந்த அவருக்கு சுமார் 11.45 மணியளவில் செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தொழில் ரீதியாக பேச வேண்டும் எனவும், உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க துவங்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற பரூக்கை சரமாரியாக குத்தி நிலைகுலைய செய்து அங்கிருந்து தப்பினர். பரூக்கின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வருவதற்குள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரூக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



பின்னர் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் நடந்த அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று இருசக்கர வாகனத்திலும் ஒரு ஆட்டோவிலும் தப்பி சென்றது விசாரனையில் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது ஆத்துப்பாலம் டோல்கேட் தாக்குதலில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு  கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டவர் பரூக் என்பதும் தெரிய வந்துள்ளது. கொலை சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க  போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...