பழமுதிர் நிலையம் நிறுவனர் சின்னசாமி-க்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் தொழில் சார் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


பழமுதிர் நிலையம் நிறுவனர் சின்னசாமி-க்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் தொழில் சார் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.



கோவை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர்-ன் தலைவர் குர்ப்ரீத் சிங் முன்னிலை வகித்தார். பாரதிய வித்யா பவன் பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சின்னசாமி-க்கு விருதினை வழங்கி கவுரவித்தார் . 



தொடர்ந்து பழமுதிர் நிலைய நிறுவனர் சின்னசாமி பேசுகையில், 'என் போன்ற குறுந்தொழில் முனைவோருக்கும் விருது வழங்கி கவுரவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.



தொடர்ந்து கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:- 

ஒவ்வொரு சாதனையாளரையும் பாராட்டி அதன் வாயிலாக மகிழ்ச்சியடைவது பாரட்டுதலுக்குரியது. அதனை ரோட்டரி க்ளப் செம்மையாக செய்து வருகிறது. எந்த சமூகம் ஒவ்வொருவரின் வெற்றியையும் பாராட்டுகிறதோ அந்த சமூகம் தான் நல்ல நிலையை அடையும்.  இன்றய காலகட்டத்தில் வழங்கப்படும் சில விருதுகளுக்கு விலை உள்ளது. ஆனால், ரோட்டரி க்ளப் சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு எந்த விலையும் இல்லை. உண்மையும், உழைப்புமே விருதுக்கான விலை. அதற்கு உதாரணம் இன்று சின்னசாமிக்கு வழங்கப்படும் விருது. ஆரம்பகாலகட்டத்தில் தள்ளு வண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் நடத்தி இன்று பெரிய அளவில் வளர்ந்து, தன் நிறுவனத்திற்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வைத்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் அவருக்கு யாருடைய துணையும்  இல்லை. உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவரை இந்த நிலைக்கு  வளர்த்துள்ளது. இளைஞர்களுக்கு சின்னசாமி போன்றோரின் சாதனைகள் தெரிய வேண்டும். அப்போது தான் அனைவராலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களுக்கு கிடைக்கும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...