கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; நிர்வாக அதிகாரி விளையாட்டு ஆசிரியர் கைது

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோபள்ளியில் பாலியல் தொல்லை புகாரில் 2 ஊழியர்கள் கைது செய்யபட்டனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில்ஸ்ரீ சைதன்யா டெக்னோ என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நேராக பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மதியழகன், கல்பனா ஸ்ரீதர், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வி, ஆகியோர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளியின் நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் கணபதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் காரமடை வெள்ளியங்காட்டைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

மேலும் மாணவிகளிடம் இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் உங்களின் பெற்றோரிடம் உங்களைப் பற்றி தவறாக கூறி விடுவோம் என்று கூறி மிரட்டியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்துமகளிர் காவல்துறையினர், உடனடியாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....