ஆனைமலையில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை - வனத்துறையினர் தீவிர விசாரணை

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த 7 வயது சிறுத்தையின் உடல் வனத்துறையின் உத்தரவுப்படி காட்டுப் பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மர்மமாக இறந்த ஆண் சிறுத்தை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, போத்தமடை சுற்றுக்கு உட்பட்ட ஐயப்பன் கோவில் பகுதியில், சிறுத்தை ஒன்று, இறந்து கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து, கள இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில், வனச்சரகர் புகழேந்தி, இயற்கை வரலாறு அறக்கட்டளையை சேர்ந்த திருமலைசாமி, தன்னார்வ அமைப்பை சேர்ந்த ரவிக்குமார் அடங்கிய குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்த சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர்.

அதில், இறந்தது 7 வயதுள்ள ஆண் சிறுத்தை என்பதும் கண்டறியப்பட்டது. சிறுத்தையின் உடலில், அனைத்து பற்களும், நகங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிற விலங்குடன் சண்டையிட்டதால், சிறுத்தை இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அங்கேயே, சிறுத்தையின் உடல் தீயிட்டு எரியூட்டப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...