ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் இன்று 'இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா' கொண்டாட்டம்

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் செயல்பட்ட வரும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி முனைவர் இளசை. சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் உயர்ந்த எண்ணங்களும், நற்சிந்தனைகளும் உடையவர்களாக விளங்க வேண்டும். சமூக அக்கறை உடையவர்களாக தொண்டாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் எல்லோரையும் பாராட்ட வேண்டும்.  இன்று சமுதாயத்தில் பிறரை பாராட்டாமல் குறை கூறியே வருகின்றனர். பிறரின் குறையினை குற்றமாக கருதாமல் அவற்றினை அவர்கள் புரியும்படி திருத்த வேண்டும்.



பிறரை பாராட்டி பழக கற்றுக் கொள்ளுங்கள். நாம் செய்யும் செயல்களில் புதுமையினைப் புகுத்த வேண்டும்.  காலத்திற்கேற்றாற் போல் நாம் நமது செயல்களைச் செய்ய வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும். பிறரிடம் கையேந்தாமல் சொந்தமாக சம்பாதித்து தனது நிலையினை உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.

இவ்விழாவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பி.பிரியா வரவேற்புரை வழங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கி.சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து வகுப்புகளில் படிப்பில் முதலிடத்தினைப் பெற்ற மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இதில் பல போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்று வணிகவியல் துறை ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை கணிதத்துறை வென்றது. முதல்வர் முனைவர் வி.இராதிகா கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். நிரைவாக கணினி அறிவியல் துறைத்தலைவர் சீமாதேவ் அக்ஷதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...