தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து - கோவையில் துரை வைகோ பேட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனைகளை மேற்கொண்டார்.



கோவை: சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இந்து மதம் என்பது வாழ்வியல் முறை என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.



இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பொதுக்கூட்டம் குறித்தான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,




சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இந்து மதம் என்பது வாழ்வியல் முறை. அதில் சிலர் திரித்து மக்களிடம் பிரிவினை உருவாக்கும் வகையில் சாதிகளை உருவாக்கினார்கள்.

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் போராடியது இந்து மதத்திற்கு எதிராக அல்ல. வட நாட்டில் 48 மணி நேரமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள்.

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள். அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதி கழுத்தை சீவுவேன் என தலிபான் போல சொல்கிறார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்கள் படிக்க கூடாது, மாற்று கருத்து சொன்னால் கழுத்தை அறுப்பேன் என சொல்கிறார்கள்.

அதே கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து. இது தான் சனாதனம். மதம், சாதி வைத்து அரசியல் செய்யக்கூடாது. விவாதம் இருக்கலாம். ஆனால் வன்முறை இருக்க கூடாது. உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் திமுக, இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.

இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்ற பெயர் வருவதற்கு முன்பே இந்தியா என்ற பெயர் தான் வந்தது. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது பெயர் மாற்றம் இப்போது தேவையா? இது தேவையில்லாத சர்ச்சை.

திமுக ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. பல தேர்தல்களில் பெரும்பான்மை பலம் வருவதில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள்.

மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் அடித்தளம். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே இந்தியா என்ற பெயர் வந்து விட்டது. ஆர்.பி.ஐ, பி.சி.சி.ஐ பெயர்களையும் மாற்றுவார்களா? இது தேவையில்லாத குழப்பம் என துரை வைகோ தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...