கோவையில் வாக்கு சாவடி பட்டியல் திருத்த ஆய்வு கூட்டம்..! அரசியல் கட்சியினர் பங்கேற்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த வாக்கு சாவடிகள், புதிதாக தேவைப்படும் வாக்குசாவடிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.



கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டறங்களில் நடைபெற்ற வாக்குசாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் வாக்குசாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கடந்த முறை வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப சிக்கல் குறித்தும் அவை இம்முறை களையபடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசிப்பட்டது.

வாக்குசாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு சாவடி பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.



இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உட்பட தாசில்தார்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த வாக்கு சாவடிகள், புதிதாக தேவைப்படும் வாக்குசாவடிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கடந்த முறை வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப சிக்கல் குறித்தும் அவை இம்முறை களையபடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கட்சியினரின் பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட தாசில்தார்களும் விளக்கமளித்தனர். இதில் மலைப்பகுதிகளில் இருக்கும் கிராம மக்கள் வாக்களிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து அரசியல் கட்சியினர் எடுத்துரைத்தனர். இதில் அரசியல் கட்சியினர் தாசில்தார்கள் கூறிய அனைத்து விஷயங்களும் குறிப்பெடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...