திருப்பூரில் தையல் இயந்திர கண்காட்சி - தானாகவே துணி தைக்கும் அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம்!

திருப்பூரில் நடைபெற்ற தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தானாகவே துணி தைக்கும் அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யபட்ட நிலையில், உதவியாளர்களே இயக்க முடியும் என்பதால், ஆட் பற்றாக்குறைக்கு இது தீர்வாக அமையும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் நடந்து வரும் தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தானாகவே துணி தைக்க கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பனியன் ஏற்றுமதி செய்கின்ற திருப்பூர் நகரில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் பனியன் உள்ளாடைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பின்னலாடைகள் உலகம் முழுமைக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த பனியன் ஏற்றுமதிக்கான உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான தொழிற்சாலைகளில், சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பணிபுரிகிறார்கள்.

ஆனாலும் திருப்பூர் தொழில் துறையினரின் ஆட்கள் பற்றாக்குறை என்பது தீர்ந்தபாடாக இல்லை. இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது திருப்பூர் தொழில்துறையினருக்கு தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

புலம் பெயர் தொழிலாளர்கள் எடுக்கக்கூடிய தொடர் விடுமுறைகள், சொந்த ஊருக்கு செல்வது போன்ற காரணங்களால் திருப்பூர் பனியன் தொழிலில் ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 40 சதவீத அளவில் எல்லா காலங்களிலுமே ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது.



இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூரில் நடந்த தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தைக்கக்கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.



பனியன் மற்றும் டீ சர்ட் தயாரிப்பில் கை டவர், பாடி டவர், பாக்கெட் வைப்பது போன்ற பணிகளை தானாகவே மேற்கொள்ளும் பேட்லாக் தையல் இயந்திரம் காட்சிப்படுத்தி விளக்கப்பட்டது. துணிகளை கன்வேயரில் வைத்தால் தானாகவே மடித்து தைத்து பின்னர் அடுக்கி தருகிறது இந்த இயந்திரம்.



அதேபோல தானாகவே பாக்கெட் பொருத்தக்கூடிய தையல் இயந்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்களை திருப்பூர் சார்ந்த தொழில்துறையினர் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றார்கள்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது, அதி நவீன இயந்திரங்களின் வருகையால் ஆற்றல் பற்றாக்குறைக்கு பெரும் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.

இதேபோல், கான்சாய் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது, இயந்திரங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

தற்போது பேட்லாக் இயந்திரங்களில் கை டவர் மற்றும் பாடி டவர் போன்றவற்றை தானாகவே வைக்கும் இயந்திரங்களை உருவாக்கி அதை திருப்பூர் கண்காட்சியில் காட்சிக்கு வைத்து இருக்கிறோம். சாதாரணமாக 1500 பீஸ்கள் தயாரிக்க கூடிய இடத்தில் இந்த நவீன தானியங்கி தையல் இயந்திரங்கள் மூலமாக 2500 முதல் 3000 பீஸ்கள் தயாரிக்க முடியும்.

டெய்லர் இல்லாமல் உதவியாளரே இந்த மிஷின்களை இயக்க முடியும். இது தவிர ஓவர் லாக் மற்றும் பிளாட் லாக் இயந்திரங்களில் சென்சார்களுடன் கூடிய அதிநவீன வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாதாரண உதவியாளர்களே இந்த மெஷின்களை இயக்க முடியும். எனவே திருப்பூரில் ஆட்கள் பற்றாக்குறைக்கு இந்த இயந்திரங்கள் தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...