பா.ஜ.க ஆட்சி காலத்திற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தகவல்


பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதோ நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் "டாக்டர் ஜி. ஹெல்த் கிளீனிக்" என்னும் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உச்ச நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும், பா.ஜ.க முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளருமான பிங்கி ஆன்ந்தன் கலந்து கொண்டு சிறந்த பெண்களுக்கான விருதுகளை வழங்கினார்.



தொடர்ந்து மகளிர் மேம்பாடு என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் பிங்கி ஆனந்த் சிறப்புரையாற்றினார். இதையடுத்து அம்மருத்துவமனையின் பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் மருத்துவரான கங்காதேவி மகளிர் ஆற்றல் மற்றும் திறன்கள் குறித்து உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிங்கி ஆனந்த், மத்தியில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி செய்து வந்தாலும், ராஜிய சபாவில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தான் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா  நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.



பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த மசோதா நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சிக் காலத்திற்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பெண்கள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இதனை தடுப்பதற்கான போதிய சட்டங்கள் இருப்பதாகவும், தற்போதைக்கு சமூக சீர்திருத்தமே தேவை எனவும் கூறினார்.

இதேபோல் பிரகாஷ் சிங் வழக்கு மூலம் கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்த சட்டத்தை அந்தந்த மாநிலங்கள்  அமல்படுத்துவது அவசியம் எனவும் பிங்கி ஆனந்த் வலியுறுத்தினார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...