ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்!

கோவை பீளமேடு அருகே யு.டி.எஸ் என்ற நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 4 திட்டங்களில், 76,000-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்த ரூ.1300 கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார்கள் குவிந்த நிலையில், நிறுவன உரிமையாளர் ரமேஷ் (30) கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை: ரூ.1,300 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த யுடிஎஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.



கோவை மாவட்டம் சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் பீளமேடு பகுதியில் யு.டி.எஸ்., எனும் நிறுவனத்தை, 2012ம் ஆண்டு துவங்கி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளாவில் கிளைகளை ஏற்படுத்தினார்.

இந்த நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட, 4 திட்டங்களில், 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ.1300 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல், ரமேஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக டி.எஸ்.பி., முருகானந்தம் தலைமையில், தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவான ரமேஷ் கடந்த, 6ம் தேதி கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சேலத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்தவர், சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். புகார்கள் குவிந்ததால் தலைமறைவானார். 

இந்நிலையில் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததை அறிந்து அவர் டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கேரளாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளதால், அம்மாநில போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். கோவை போலீசாரும் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

முதலீடு செய்த, 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில், இதுவரை தமிழகத்தில் 50 பேரும், கேரளாவில் 44 பேரும் மட்டுமே புகார் அளித்துள்ளனர். 

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....