10ஆம் வகுப்பில் பெயிலாகி படிச்ச நானே கலெக்டர் ஆகிட்டேன் உன்னால முடியாதா? - மாணவருக்கு ஊக்கமளித்த திருப்பூர் ஆட்சியர்!

பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அங்கு, பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற மாணவரிடம் 10ஆம் வகுப்பில் பெயிலாகி படிச்ச நானே கலெக்டர் ஆகிட்டேன் உன்னால முடியாதா? என்றும், நன்றாக படித்து தேர்ச்சி அடைய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று தற்கொலைக்கு முயன்ற மாணவர் ஒருவருக்கு ஊக்கமளிக்கும் அறிவுரைகளை வழங்கினார்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் தவித்து வருவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்பு சிகிச்சை பகுதி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா என்பது குறித்தும் அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அனீஸ் என்ற பள்ளி மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அந்த மாணவனின் உடல் நலம் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். 



பின்னர் அந்த மாணவனிடம் "10th பெயில் ஆகி படித்த நானே மாவட்ட கலெக்டர் ஆகிட்டேன். உன்னால முடியாதா? இன்னும் நல்லா படிச்சி 12th ல நல்ல மார்க் எடுக்கணும். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு அலைபேசியில் அழைத்து கண்டிப்பாக சொல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். 



மேலும் நானும் வாலிபால் பிளேயர் தான் எனவும் நன்றாக விளையாடு எனவும் உன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். எதை பற்றியும் கவலை படாதே! உறுதியோடு படி என தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு மன வலிமை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.



தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் கழிப்பிட வசதி இல்லாததால் பேருந்து நிலையம் வரை நோயாளிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், சித்தா பிரிவு அறை இருக்கும் இடத்திற்கு வழிகாட்டி பதாகைகள் வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமை மருத்துவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...