சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என சாலை பாதுகாப்பு கருத்தரங்கில் ஆட்சியர் பேச்சு

கோவை பிஆர்எஸ் மைதானம் காவலர் பயிற்சி பள்ளி கூட்டரங்கில் இன்று சாலைபாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நிழச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் முன்னிலை வகித்தார். 



இந்நிகழ்ச்சியில் சாலைபாதுகாப்பு கையேட்டினை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கி பேசுகையில், சாலை பாதுகாப்புப் பணியில் மேம்படுத்துவது சம்மந்தமாக மாநில அரசால் விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரிப்பதை போன்று விபத்துகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

விபத்து என்பது யாரும் விரும்பி செய்யப்படுவதில்லை. இருப்பினும் மனித தவறுகள் காரணமாகவே 90 சதவிகிதம் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளால் பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது.

பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் ஏற்படுவதால் மனித தவறுகளை குறைக்கும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும், சாலை பாதுகாப்பு சம்மந்தமாக அனைத்து துறைகளிலும் விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கோவை மாவட்டத்தில் காவல்துறையின் மூலம் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து பராமரிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டு அதனமூலம் பணியாளர் நியமனம் செய்து ஒவ்வொரு நாளும், பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதனை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும், தெரிந்து கொண்டு சாலை விதிகளை தெரிந்து கொள்வதுடன் தங்கள் வீட்டிலுள்ள பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கு இதன் அவசியம் குறித்து அறிவுறுத்த வேண்டும். 

இதே போல் சிறியவர் முதல் பெரியவர் வரை சாலை விதிகளை கடைபிடித்து செல்வோமேயானால் முற்றிலும் விபத்தை தவிர்த்திடலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

முன்னதாக பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சாலை பாதுகாப்பு விதிகளை பள்ளி குழந்தைகள் பின்பற்றும் பொருட்டு சிறுவர் போக்குவரத்து பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர். 

இந்நிகழ்ச்சயில், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ரம்யாபாரதி, துணை ஆணையர் போக்குவரத்து சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முனுசாமி, உதயகுமார், கார்த்திகேயன், மணி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...