மழையால் தனித்தீவாகும் கோவை அரசு மருத்துவமனை - நிரந்தரத் தீர்வை எதிர்நோக்கும் பொதுமக்கள்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைக்காலங்களில் நுழைவு வாயில் பகுதியில் மழைநீர் தேங்கி தனித் தீவு போல் மாறிவிடுகிறது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு முன்புறம் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. இதில், ஒரு நுழைவு வாயில் வழியாக ஆம்புலன்ஸ் உள்ளே சென்று மற்றொரு வழியாக வெளிவரும். மேலும், அதிகப்படியான பொதுமக்களும் இந்த நுழைவு வாயிலை பயன்படுத்தி வருகின்றனர்.



இதன் அருகே தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், எப்போது மழை பெய்தாலும் இந்த நுழைவு வாயில் உள்ளே மழைநீர் தேங்கி யாரும் பயன்படுத்த முடியாத வகையில், தீவு போல் மாறிவிடுகிறது.



இதனால், ஆம்புலன்ஸ் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு மற்றொரு வழியாக மட்டுமே உள்ளே சென்று வெளியில் வருகிறது.



அதே சமயம் அந்த ஒரு நுழைவு வாயிலை பொதுமக்களும் பயன்படுத்துவதால், அங்கு நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனற். தேங்கிய மழை நீரை மருத்துவமனை நிர்வாகமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ இயந்திரங்களை கொண்டு அகற்றிய பிறகுதான் இந்த வழியை மீண்டும் பயன்படுத்த முடிகிறது.

எனவே, இந்த நுழைவு வாயிலின் உள்ளே மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...