ஈஷா மையத்திற்கு வரும் மோடியை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஈஷா யோகா மையத்தின் மீதும், ஈஷாவின் ஆதியோகி சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி மீதும் அவதூறு பரப்பி எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை கோவை வரவுள்ளார்.

இதனிடையே, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈஷா யோகா மையத்தின் மீதும், மோடியின் மீதும் எதிர்ப்பு தெரிவித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். 



இவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. காருண்யா நிறுவனத்தின் பின்னணியும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் தூண்டுதல் பேரில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள், சவுக்கு, வினவு உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, ஈஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நடைபெற்று வரும் அவதூறு பிரச்சாரங்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...