கோவையில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் ஆய்வு - தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

கோவை மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் நேரில் ஆய்வு செய்து, ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையை அடுத்த மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, கடந்த பிப்., 26ல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கிணத்துக்கடவு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார் தலைமையிலான குழு, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அனுமதி பெற்ற அனுமதி பெறாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் தலா 100 குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் துகள்கள் விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கிரஷர் மற்றும் குவாரிகளை சுற்றிலும் நைலான் மற்றும் கம்பி வலை அமைக்கவும், துணியாலான மாசுத்தடுப்பு சல்லடை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் இல்லாத கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை இயக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த வலை மற்றும் துணியை பயன்படுத்தினால் விவசாய நிலங்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாது, என்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...