புதிய மின் இணைப்பு பெற உரிமைச்சான்று கேட்கும் மின்சார வாரியம் - தவிக்கும் உடுமலை மக்கள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்கும் நிலையில், வருவாய் துறையினர் உரிமை சான்று கொடுக்க மறுப்பதால் செய்வதறியாது பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் புதிய மின் இணைப்பு பெற மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்பதால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, பல இன்னல்களுக்குப் பிறகு புதிய வீடு கட்டி அதற்கு, மின் இணைப்பு பெறுவதற்காக மின் வாரியத்தை அணுகும்போது ஆதார் நகல், வீட்டு பத்திரம், வீட்டு வரி ரசீது உள்ளிட்டவைகளோடு, இடத்துக்கு சொந்தக்காரர் அவர் தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதை வாங்க, வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகினால், உரிமைச்சான்று வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் பலரும் தவிக்கும் நிலை உரு வாகியுள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் உரிமைச்சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெற்று தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் கடன் பெறுவதற்கு உரிமைச்சான்று தேவையில்லை என்று அறிவித்தது போல மின் வாரியத்திலும் அறிவிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

புதிய மின் இணைப்பு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பட்டியலில் உரிமைச் சான்று குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விவரம் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பு பெறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...