கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி - ஆறு பேர் கைது

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.21 லட்சத்தை மோசடி செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல், வேலை வாங்கி தருவதாக பலரையும் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம்.


கோவை: கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி நியமன ஆணை வழங்கி பலரை ஏமாற்றிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (56). இவர் தன் மகளுக்கு அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திராஜ் மகன் சரவணக்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

சரவணகுமார், நான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன் என்றும், இந்து சமய அறநிலையத் துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதற்காக தன் கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் (33), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (33), பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (34) மற்றும் சுதாகர் (37) ஆகிய நபர்களுடன் இணைந்து சந்தான கிருஷ்ணனிடம் இருந்து மட்டும் ரூ. 21 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். சிறிது நாளிலேயே அது போலி ஆணை என்று தெரியவந்துள்ளது.

இந்த மோசடி குறித்து சந்தான கிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்தனர்.

நேற்று சரவணகுமார் உட்பட 6 பேரையும் போலீஸ் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரை ஏமாற்றி, கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்துள்ளது.

இதேபோல, அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக யாராவது கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கோவை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....