உடுமலையில் ஏப்.2-வது வாரத்தில் கரும்பு அரவைப் பணி தொடக்கம் - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணிகள் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்களை பராமரிப்பு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது காரணமாக கரும்பு விவசாயிகளிடம் இருந்து முழு அளவில் கரும்பை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கரும்பு அரவை பணியை தொடங்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கரும்பு அரவை தொடங்கும் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறும்போது, 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.



இன்னும் 200 ஏக்கர் பதிவு செய்யப்பட உள்ளது. 62 ஆண்டுகள் பழமையான ஆலையில் எந்திரங்கள் பழுதடைந்துள்ளது. ரூ.10 கோடியில் எந்திரங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. கரும்பை எந்திரத்தில் தள்ளுவதற்கு எந்திர உதவி மேம்படுத்தப்பட்டு உள்ளது.

மார்ச் மாதத்துக்குள் இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் தொழிலாளர்களை முன்கூட்டியே அழைத்துவந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...