கோவையில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு - அதிரடியாக மீட்ட அதிகாரிகள்!

கோவை தேவராயபுரத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை: கோவை தேவராயபுரம் ஆக்கிரமிப்பிலிருந்த வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் பரமேஷ்வரன் பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 24.7 ஏக்கர் நிலங்கள் தேவராயம்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலங்களைக் கடந்த 25 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், ராமசாமி, சீனிவாச ஐயங்கார், ஆனந்தகிருஷ்ணன் ஐயங்கார், உள்ளிட்ட 5 பேர் ஆக்கிரமிப்பு செய்து கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளைச் செய்து வந்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கோவிலுக்குச் சொந்தமான சுமார் 25 கோடி மதிப்பிலான 24.7 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர்.



மேலும் அங்கு இது குறித்தான அறிவிப்புப் பலகை வைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...