திருப்பூர் பல்லடம் அருகே மயான பூமியை ஆக்கிரமித்து திறக்கப்பட்ட திமுக அலுவலகம் - பொதுமக்கள் அதிருப்தி

பல்லடம் அடுத்த மாதப்பூர் ஊராட்சியில் மயான பூமியை ஆக்கிரமித்து திமுக கட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட நிலையில், பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சி தலைவராக பாஜகவை சேர்ந்த அசோக்குமார் தலைவராக உள்ளார்.



இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் மாதப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் இன்று காலை திமுக தோரணம் மற்றும் கட்சிக் கொடியுடன் கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றதாக தெரிகிறது.

இந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் அமைந்துள்ள இடமானது மயான பூமி எனவும் கூறப்படுகிறது.

விடுமுறை நாட்களை பயன்படுத்தி மயான பூமியை ஆக்கிரமித்து திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பல்லடம் தாசில்தாரிடம் கேட்டபோது, முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பொங்கலூர் ஒன்றிய சேர்மன் குமாரிடம் கேட்டபோது, திறக்கப்பட்டது ஏற்கனவே அங்கிருந்த டீக்கடை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...