கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 32 பயணிகள் காயம்

கோவை நீலாம்பூர் அருகே பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு, கோவை வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. அந்த பேருந்தில், 37 பயணிகள் மற்றும் ஓட்டுனர், கிளீனர், உதவியாளர் என 40 பேர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து கோவை புறவழி சாலையில் நீலம்பூர் அருகேயுள்ள வெங்கடாபுரம் பிரிவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துரதிஷ்டவசமாக ஆம்னி பேருந்தானது, சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள், ஓட்டுநர் உட்பட 32 பேர் காயமடைந்தனர்.

இதில், 14 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறிய காயங்கள் அடைந்தவர்கள் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில், சூலூர் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...