ஏப்ரலில் முழு வரவு செலவு கணக்குகளையும் வெளியிடுகிறேன் - திருப்பூரில் பாஜக தலைவர் அண்ணாமலை

திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாட்ச் வாங்கிய ரசீது குறித்த கேள்விக்கு, ஏப்ரல் மாதத்தில் முழு வரவு சில கணக்குகளையும் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் கோவில் வழி பகுதியில் பாஜக வீரபாண்டி மண்டலம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினரின் பேச்சுக்கள் அவதூறாக மாறி வருகிறது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பிய கேள்விக்கு நிச்சயம் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணம் என்பது வாக்கிங் எக்சர்சைஸ் தான். அது ஜோடோ யாத்திரை அல்ல தோடா யாத்திரை இந்தியாவை பிளவுபடுத்தும் யாத்திரை.

ராகுல்நடை பயணத்தின் வெற்றி குஜராத் தேர்தலிலேயே தெரிந்தது ஒரு தொகுதியில் கூட காங்கிரசால் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை.

பாரதிய ஜனதா மேற்கொள்ள இருக்கின்ற நடைபயணம் என்பது தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்களது பிரச்சனைகளை கேட்டு அறிந்து 1 வருட காலம் அவர்களுடனே ஒன்றினைய மேற்கொள்ளப்படும் நடைபயணம்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பில் மட்டுமல்ல எனது முழு வரவு செலவு கணக்கையும் ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்கிறேன். அடுத்த மாதத்தில் ஒரு இணையதளம் தொடங்கி திமுக எம்எல்ஏ துவங்கி அமைச்சர் வரையிலான ஊழல் பட்டியலில் வெளியிட இருக்கிறோம்.

இலவச தொடர்பு எண்ணை அறிமுகம் செய்து அந்தந்த பகுதியில் திமுக பினாமிகள் சேர்த்து வைத்த சொத்து பட்டியலையும் பொது மக்களாகவே தெரிவிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.

சாமானிய மக்களை பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் எம்ஜிஆரை கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இன்று என்னை கேட்கிறார்கள்.

முதலமைச்சரின் குடும்பம் மற்றும் 13 அமைச்சர்களின் பட்டியலை தயார் செய்து உள்ளோம் இதில் 2 லட்சம் கோடி ஊழல் வெளி வந்துள்ளது.

திமுக தொட்டுவிட்டார்கள் முடிவுரை பாஜக எழுத இருக்கிறது. 2ஜி ஊழலால் திமுக மற்றும் காங்கிரசுக்கு முடிவுரை எழுதப்பட்டதோ, அதேபோல் நாங்கள் கேட்கும் கேள்வி திமுகவிற்கு முடிவுரை எழுதும்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அண்ணாமலை வழங்கினார்.

Newsletter

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...