மின் சிக்கன வாரம்: திருப்பூர் பல்லடத்தில் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மின்சார வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்று, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.



திருப்பூர்: மின்சார வாரியம் சார்பில் டிசம்பர் மாதத்தில் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதில், மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.



அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.



பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, உடுமலை சாலையில் உள்ள மின்சார அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இந்த பேரணியில், வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் இயங்கும் மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும். இரவு முழுவதும் மின் விளக்கை எரிய வேண்டிய இடத்தில் குறைந்த பல்புகளை பொருத்த வேண்டும், தண்ணீர் சூடேறிய உடன் உடனடியாக வாட்டர் ஹீட்டரை அணைக்க வேண்டும்.

தூங்குவதற்கு முன்பும், வெளியில் செல்லும் போதும் தேவையில்லாத அனைத்து மின் சாதனங்களையும் அணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



இந்தப் பேரணியில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...