திருப்பூர் அருகே கோவில் பூசாரி மர்மமான முறையில் எரித்துக் கொலை - போலீசார் தீவிர விசாரணை..!

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த சுப்பிரமணி என்பவர் அதே கோவிலுக்கு பின்புறம் எரித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (72). அவரது மனைவி பார்வதி (65). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி அப்பகுதியில் உள்ள கோயிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது மகள் கவுரி, சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்த போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, கோவிலின் பின்புறம் சென்று பார்த்தபோது, அங்கு எரிக்கப்பட்ட நிலையில் சுப்பிரமணி சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா.? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் பூசாரி எரித்துக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...