நீலகிரி பந்திப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி அடுத்த பந்திப்பூர் அருகே கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு மைசூர் நோக்கி சென்ற லாரி மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் வழியாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை இணைக்க கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள் கக்கநல்லா மற்றும் முத்தங்கா சாலைகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.



இந்நிலையில் நேற்று இரவு கேரளாவில் இருந்து முத்தங்கா வழியாக மைசூர் நோக்கிச் சென்ற கோவை பதிவு எண் கொண்ட லாரி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் அருகே சாலையை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பந்திப்பூர் வனத்துறையினர் லாரியை பிடித்து வைத்துள்ளதுடன் யானையை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...