கோவையில் எந்தவித பரபரப்புமின்றி இதய தெய்வம் மாளிகை: குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள்!


தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேற்றும் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா குறித்தும், தன் அமைச்சரவை சகாக்கள் குறித்தும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். இதை தொடர்ந்து, தமிழக  அரசியல் களத்தை பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இரு தரப்பாக பிளவடைந்துள்ள கட்சியில் எந்தபக்கம் செல்வதென்று சட்டமன்ற உறுப்பினர்களுடன்  அ.தி.மு.க தொண்டர்களும் கலக்கமடைந்தனர்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை எந்த வித பரபரப்புமின்று காட்சியளிக்கிறது. கட்சி தொடர்பான எந்த பிரச்சனையின் போதும், விழாக்களின் போதும் தொண்டர்கள் படை சூழ காணப்பட்ட இதய தெய்வம் மாளிகை தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் ஒரு சிலரும் என்ன செய்வதென்று அறியாமல் தொலைக்காட்சியை பார்த்தபடி பெரும் குழப்பத்தில் அமர்ந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடி வருகின்ற நிலையில், கோவை மிகுந்த அமைதியான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...