கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் 4 மாத கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்தார்.


Coimbatore: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் National Animal Disease Control Programme (NADCP) திட்டத்தின் கீழ் 2026 ஆண்டிற்கான கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசிப் பணி ஜூலை 1, 2026 முதல் ஆகஸ்ட் 10, 2026 வரை 9வது சுற்றாக நடத்தப்பட உள்ளது. இப்பணியின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்தார்.

இத்தடுப்பூசிப் பணி செவ்வனே நடைபெறும் வகையில், நோய்க்கான தடுப்பூசி (Vaccine) Walk in Coolers எனப்படும் குளிரூட்டும் அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில், பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக் குழுவினர் மூலம் குளிர் சங்கிலி முறையில் (Cold Chain) தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு, தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

கால் மற்றும் வாய் (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.

மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலத்தில், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்படும் கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றின் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு ஜூலை 1, 2026 முதல் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...