டாஸ்மாக் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் கைது - 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை அறிவொளி நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அறிவொளி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையுடனான பார் இயங்கி வருகிறது. இந்த பாருக்கு நேற்றைய தினம் 2 மதுப்பிரியர்கள் வந்து மது அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து, மதுப்பிரியர்கள் இருவரும் பாரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதில், பார் ஊழியர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த மதுப்பிரியர்கள் பாரில் இருந்த சேர் மற்றும் டேபிள்களை தரையில் போட்டு உடைத்துள்ளனர். மேலும் காலி பாட்டில்களை பார் ஊழியர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களான அஜித் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில், மேஜை மீது காலை போட்டதால் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் மீது, காயம் ஏற்படுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மதுப்பிரியர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...