கோவையில் இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் - அழகான பெண் குழந்தை பிறந்தது

நம்.4 வீரபாண்டி அருகே மணிமேகலை என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.



கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி மணிமேகலை (26). நிறைமாத கர்ப்பினியான மணிமேகலைக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காரமடை ஆம்புலன்சில் மணிமேகலையை அழைத்துச் சென்றனர். ஆனால் அவருக்கு குழந்தை வெளியே வர துவங்கியதால், ஆம்புலன்சில் இருந்த மருத்துவரே பிரசவம் பார்த்துள்ளார்.

மருத்துவர் பிரசவம் பார்ப்பதற்கு, உறவினர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கிலி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர். இதில் மணிமேகலைக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இருவரும் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இருவரையும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...