'மல்லையாவுக்கு மட்டுமா; எனக்கு தள்ளுபடி இல்லையா!'

மும்பை: 'விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடனை தள்ளுபடி செய்தது போல, நான் வாங்கிய, 1.5 லட்சம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, துப்புரவு தொழிலாளி ஒருவர், எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் வங்கிக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மல்லையாவுக்கு தள்ளுபடி:

தொழில் அதிபர் விஜய் மல்லையாவின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கிய, 1,200 கோடி ரூபாய் உட்பட, 62 பெரும் பணக்காரர்கள் வாங்கிய, 7,016 கோடி ரூபாய் கடனை, எஸ்.பி.ஐ., தள்ளுபடி செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் திரியம்பகேஷ்வர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளியான, பாபுராவ் சோனாவானே, உள்ளூர், எஸ்.பி.ஐ., கிளைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

எனக்கும் தள்ளுபடி செய்யுங்கள்:

அதில், கூறியுள்ளதாவது: விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்துள்ளீர்கள்; சிறந்த முடிவு; அது போலவே என் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். என் மகனின் சிகிச்சைக்காக, தங்கள் வங்கியில், 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்; அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே, நான் வங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ஆனால், இந்த கடிதத்திற்கு, சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் பதில் ஏதும் அளிக்கவில்லை.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...