10 நாட்களுக்கு பின் வங்கிகளுக்கு இன்று விடுமுறை

ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரும் பணியில் ஈடுபட்டு வரும் வங்கி ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (நவம்பர் 20) ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த 8ம் தேதி அறிவித்த பிரதமர் மோடி, மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தார். வங்கிகளில் இருந்த அந்த நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டு செல்லத்தக்க நோட்டுகளை இருப்பில் வைப்பதற்காக 9-ந்தேதி விடுமுறை விடப்பட்டது. பின்னர் 10-ந்தேதி முதல் வங்கிகள் செயல்பட தொடங்கியதும் மக்கள் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் அனைத்து வங்கிகளிலும் குவிந்தனர். இதனால் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட வங்கிகள் செயல்பட்டன.

இவ்வாறு ஓய்வின்றி உழைத்து வந்த வங்கி ஊழியர்களுக்கு ஓய்வு அளிப்பதற்காக இன்று ஒரு நாள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த தகவலை பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து வருகின்றன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...