அசாமில் என்கவுன்ட்டர் : 3 வீரர்கள் பலி

டிக்போய் : அசாமில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலியாகி உள்ளனர்.

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டை ராணுவ வாகனம் மீது வீசி தாக்கினர். இதில் 3 வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. உல்பா பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உல்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை சுற்றி வளைத்து, பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...