இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு



புதுடெல்லி: சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஜாகீர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, அவரை விசாரணை வளையத்துக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது.

சவூதி அரேபியாவில் இருப்பதாக கூறப்படும் ஜாகீர் நாயக் இந்தியா திரும்ப மறுத்து வருகிறார். முன்னதாக இந்த வார துவக்கத்தில், ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஜாகீர் நாயக் மதங்களுக்கு எதிராக பேசுவதாக இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அவருக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன. அதேபோல், மலேசியாவில் தடை செய்யப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...