வாடிக்கையாளர்களின் வங்கி ‘லாக்கர்’களை பறிமுதல் செய்ய திட்டமா? நிதி அமைச்சகம் விளக்கம்



புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் வங்கி ‘லாக்கர்’களை பறிமுதல் செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.

மத்திய அரசு மறுப்பு:
அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு, பல்வேறு விதமான வதந்திகள் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வரிசையில் தற்போது, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி ‘லாக்கர்’களுக்குள் வைத்து இருக்கும் நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற தகவலும் சேர்ந்து கொண்டு உள்ளது.

இதை மறுத்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பறிமுதல் கிடையாது:

வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் லாக்கர்களை பறிமுதல் செய்யப்போவதாக பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சிலர் சமூக ஊடகங்களில் திட்டமிட்டே இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகளை மக்கள் யாரும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.

இதேபோல் ரூ.50, ரூ.100 மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வருகிறது. இதையும் நம்பவேண்டாம்.

பயன் அடைவார்கள்:

சந்தையில் கருப்பு பண புழக்கத்தை தடுப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எனவே, ரூபாய் நோட்டு புழக்கத்தை சம்பந்தப்பட்ட அரசு இலாகாக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கவேண்டும்.

ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்று அறிவிப்பால் ஏழைகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டு உள்ளது. இது பொருளாதாரத்தை நிச்சயம் ஊக்கப்படுத்தும். இதன் முடிவில் ஏழைகளும், சமுதாயத்தில் பின்தங்கி இருப்போரும் பலன் அடைவார்கள்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கை அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட யாருக்கும் முன்கூட்டியே தெரியாது.

கடும் நடவடிக்கை:

பல இடங்களில் ஜன்தன் யோஜ்னா வங்கி கணக்குகள், குடும்பத் தலைவிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோருடைய வங்கிக் கணக்குகளை, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு தவறாக பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளன.

இந்த வங்கி கணக்குகளில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக கணக்கு வைத்திருப்போருக்கு பணப்பயன்கள், வெகுமதிகள் அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுபோல் வங்கிக் கணக்குகளை தவறாக பயன்படுத்துவோர் மீது வருமான வரி சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி தனது வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். (முன்னதாக ஜன்தன் யோஜ்னா கணக்கின் கீழ் ரூ.50 ஆயிரமும், மற்றவர்கள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்வரை தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறையின் வரம்புக்குள் வரமாட்டார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் இருக்காது எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.)

புதிய நண்பர்கள் வேண்டாம்:

எனவே இந்த முறையில் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக புதிய நண்பர்கள் யாரையும் வாடிக்கையாளர்கள் கூட்டு சேர்த்துக் கொள்ளவேண்டாம்.

இதுபோல் வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் பற்றி தகவலை தெரிவிக்கலாம். இவை அனைத்தும் வருமான வரித்துறையின் உடனடி நடவடிக்கைக்கு உட்பட்டது ஆகும். இதுபோல் சட்டவிரோதமாக மாற்றப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.

கருப்பு பணம் என்பது மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகும். மக்கள் அனைவரும் உதவி செய்யாதவரை கருப்பு பணத்தை ஒழிப்பது கடினம். அதற்கான நடவடிக்கைகளும் வெற்றி பெறாது. மனசாட்சியுள்ள நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசுக்கு உதவிட முன்வரவேண்டும்.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டு இருந்தது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...