கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் கடித்து அவ்வபோது உயிரிழப்பு சம்பவமும் நேரிட்டு வருகிறது. கிராம புறங்களிலும் அதிகமான நாய்கள் திரிகிறது, இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகளும், உள்ளூர் மக்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தெருநாய்கள் பிடித்துக் கொல்லப்பட்டு வருகிறது. தெருநாய்களின் தொல்லை தாங்க முடியாமல் கொல்லப்பட்டு வருகிறது. மறுபுறம் கொலை செய்யப்படுவதற்கு விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது என நீண்டுக்கொண்டு உள்ளது பிரச்சனை.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. கண்காணிப்புக் குழுக்களிடம் நாய்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் தெருநாய்களினால் மாநிலத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு நேரிட்டு உள்ளது.

கந்தன்கோடு மேம்பரம்பாது பகுதியை சேர்ந்த ஹரிதாசன் என்பவரது 15 வயது மகள் கிரிஸ்மா இன்று காலை கடைக்கு பால் வாங்க சென்று உள்ளார். பால் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது தெருநாய்கள் மொத்தமாக நின்று உள்ளன. மொத்தமாக நின்ற தெருநாய்கள் கிரிஸ்மாவை நோக்கி பாய்ந்து உள்ளது. நாய்கள் மொத்தமாக வருவதை பார்த்து மிரண்ட கிரிஸ்மா பயந்து ஓட தொடங்கிவிட்டார். பயந்து ஓடிய கிரிஸ்மா தடுப்பு சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துவிட்டார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டனர். அவருடைய சடலமானது கண்ணம்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...