அழியாத மை வைக்க வேண்டாம்: தேர்தல் கமிஷன் கோரிக்கை

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பழைய நோட்டுக்களை இந்தியா முழுவதும் பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.

திரும்ப திரும்ப நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பணத்தை மாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து நிதித்துறை அமைச்சகம் பணம் எடுக்க வரும் பொதுமக்களின் கையில் பணம் எடுத்ததற்கான அடையாளமாக மை வைக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி நேற்றிலிருந்து கையில் மை வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நிதித்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் ‘‘பல மாநிலங்களில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது. அதனால் பொதுமக்களின் கையில் அழியாத மையை வைக்க வேண்டாம்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முடிவு மத்திய நிதித்துறை அமைச்சகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...