ரிசர்வ் வங்கி கவர்னர் இல்லாததால் புதிய நோட்டு அச்சடிப்பதில் 2 மாதம் தாமதம்

1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தற்போது எல்லா இடங்களிலும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

ஆனால், 500 ரூபாய் நோட்டு குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல இடங்களில் 500 ரூபாய் நோட்டு இன்னும் வெளிவரவில்லை.

எனவே, சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு பணப்புழக்கம் முற்றிலும் முடங்கி உள்ளது. 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் போதிய அளவுக்கு மக்களிடம் புழக்கத்துக்கு வராததால் மக்கள் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

புதிய ரூபாய் நோட்டுகளை உரிய காலத்தில் அச்சடித்து வைக்காமல் இருந்தது தான் இதற்கு முக்கிய காரணமாகும். புதிய நோட்டுகள் அச்சடிப்பதற்கு தாமதம் ஆனதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்ததுதான் இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

புதிய 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்று 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்டனர். இந்த நேரத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் மாற்றப்பட்டார். எனவே, புதிய ரூபாய் நோட்டில் புதிய கவர்னர் கையெழுத்திட வேண்டிய நிலை இருந்தது.

புதிய ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் புதிய கவர்னர் இல்லாததால் அந்த நோட்டுகளை அச்சடிக்க அனுப்ப முடியவில்லை. இதனால் 2 மாதமாக அந்த பணி தொடங்கப்படாமல் அப்படியே நின்றது. அதன் பிறகு புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேல் செப்டம்பர் 4-ந் தேதி பதவி ஏற்று கொண்டார். அதன் பிறகு அவர் அந்த புதிய பணத்தில் கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் தான் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அனுப்பப்பட்டன. இதனால் தேவை இல்லாமல் 2 மாதம் புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி முடங்கி விட்டது.

இந்த காரணத்தால் தான் இன்று போதிய அளவுக்கு புதிய பணத்தை அனுப்ப முடியாமல் ரிசர்வ் வங்கி தவித்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி உள்ளனர். வழக்கமாக பாகிஸ்தானில் இருந்து தான் அதிக அளவில் கள்ள நோட்டுகள் அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. ஆனால், புதிய நோட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இனி இது போன்ற கள்ள நோட்டுகளை அச்சடித்து வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...