ரூபாய் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: பூடான் நோட்டுக்களை பயன்படுத்தும் அசாம் எல்லையோர கிராம மக்கள்

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.‘செல்லாது’ என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றவும், கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கிற நிலை, நீடிக்கிறது. அப்படி எடுக்கிற பணத்தையும் பொதுமக்களில் ஒரு தரப்பினர் புழக்கத்தில் விடாமல் பாதுகாக்கும் நிலையும் உள்ளதால், பண தட்டுப்பாடு முடிவுக்கு வராமல் தொடர் கதையாக நீளுகிறது.

நாடு முழுவதும் எந்த பாரபட்சமும் இன்றி மக்கள் திண்டாடி வரும் நிலையில், அசாம் மாநிலத்தின் எல்லையோர கிராம மக்கள் மாற்று வழியை கையாள  ஆரம்பித்துள்ளனர். அசாம் எல்லைப்பகுதியில் உள்ள பூடான் நாட்டு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பூடான் ரூபாய் மதிப்பின் தொகை 25 சதவீதம் அந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது.  எல்லையில் உள்ள டாட்குரி பகுதியில் பூடான் ரூபாய் தாள்களை அங்குள்ள சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் எளிதாக பெற்றுச்செல்கின்றனர்.

டாட்குரி கிராமத்தில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், இங்குள்ள கிராமங்களில் வங்கிகளோ, ஏடி.எம் மையங்களோ கிடையாது. ஏ.டி.எம் மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் 50 கி.மீட்டர் செல்ல வேண்டும். சவாலான சாலைகளில் அங்கு செல்வது கடினமான பணி ஆகும். எஸ்.பி.ஐ யின் நடமாடும் ஏ.டி.எம்  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருகிறது. எனவே இங்குள்ள மக்கள் பூடான் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.  பணம் வழங்குவதற்கு உரிய  நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...