வங்கிகளில் பணம் மாற்ற வருபவருக்கு மை வைக்கும் முறை டெல்லியில் அறிமுகம்

மத்திய அரசு அறிவித்த படி வங்கியில் பணம் மாற்ற வருபவருக்கு மை வைக்கும் நடைமுறை டெல்லி உட்பட வடமாநிலங்களில் உள்ள வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது’ என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.இதற்கிடையே பழைய நோட்டுகளை மாற்றுவதையே பல நபர்கள் தொழிலாக கொண்டதுபோல, மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு சென்று மாற்றி வருவதால் மற்றவர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் மீண்டும் ஒரு சில நபர்கள் பணம் எடுப்பதை தவிர்க்க, தேர்தலின்போது ஓட்டு பதிவு செய்ததற்கு அடையாளமாக கை விரலில் அழியாத மை வைப்பதுபோல, வங்கிக்கு வந்து பணத்தை மாற்றிக்கொள்கிற நபர்களுக்கு அழியாத மை வைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த முறை இன்று டெல்லியில் உள்ள வங்கியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல்,  பஞ்சாப்பில் உள்ள வங்கிகளில் பணம் மாற்றியவர்களுக்கு மை வைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வலது ஆள்காட்டி விரலிலும் பிற மாநிலங்களில் இடது ஆள்காட்டி விரலிலும் மை வைக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த முறை அமலாக ஓரிருநாள் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆட்களை அமர்த்தி வங்கிக்கு வந்து மீண்டும் மீண்டும் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...