50, 100 ரூபாய் நோட்டுக்களை இலவசமாக வழங்கும் தேவாலயம்!

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பிறகு வங்கிகள் மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து பழைய ரூபாய் தாள்களை மாற்றி புதிய ரூபாய் தாள்களை பெற மக்கள் வங்கிகளில் அலை மோதினர்.

நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம், தேவையான பணத்தினை ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள போதிலும், ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இல்லை.

இதனால் மக்கள் அனைவரும் 100 ரூபாய் நோட்டுகளுக்காக வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.இன்று முதல் சென்னை ஏ.டி.எம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க தொடங்கின.

இந்நிலையில் கேரளாவில் உள்ள தேவாலயம் ஒன்று மக்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிவித்துள்ளது. கொச்சியில் உள்ள இந்த தேவாலயத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுக்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றை தேவையானவர்கள் வந்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர் எவ்வளவு பணம் எடுத்தார்களோ அந்த பணத்தை இருக்கும்போது திரும்ப வைத்து விடலாம்.

நீங்கள் எவ்வளவு பணம் எடுக்கிறீர்கள், வைக்கிறீர்கள் என்பது உங்களுக்கும் இறைவனுக்குமே வெளிச்சம். தேவாலயத்தின் இந்த அற்புத சேவை அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில்லறை இல்லாமல் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காவே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாதிரியார் ஜிம்மி கூறியுள்ளார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...