வங்கியில் பணத்தை மாற்றினால் விரலில் மை: நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் அமல்:

டில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று முதல் அமலாகிறது.

சதி:

கறுப்பு பணம் வைத்திருப்போர், ஆட்களை குழுக்களாக அனுப்பி வைத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். கறுப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சில விரோத சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். வங்கியில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் இருப்பு குறித்து, பிரதமர் மோடி , நிதியமைச்சர் ஜெட்லி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பீதி வேண்டாம்:

பணம் தேவையான அளவு உள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. சிறிய மதிப்பு கொண்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வழிபாட்டு தலங்கள் முன்வர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில், பணப்பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னணு வாலட் முறைகளை பிரபலப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு:

அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் தேவை, சப்ளை, குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேவையான அளவு உப்பு கையிருப்பு உள்ளது. திடீர் விலையேற்றத்திற்கு காரணம் இல்லை என்றார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...