பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 24ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் அரசு அறிவிப்பு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி மத்திய அரசு திடீரென அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று வருகிறார்கள். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய  ரூ.500, ரூ.2000 நோட்டுகள் இதன் மூலம் மக்களிடம்  கொஞ்சம், கொஞ்சமாக   புழக்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.

பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்தது போக, ஏ.டி.எம்.கள் மூலமாகவும் மக்கள் பணம் பெற்று வருகிறார்கள். இன்று பொதுமக்கள் 5-வது நாளாக வங்கிகளை முற்றுகையிட்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள்.

இதற்கிடையே வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் பெறும் பணத்தின் உச்சவரம்பு  அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி வங்கிகளில் இன்று முதல் ரூ.4000க்கு பதில் ரூ.4500 வரை பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகள் மாற்றிக் கொள்ளலாம். அதுபோல ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம்.கள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய ரூ.500 நோட்டுகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்ததும் இந்த நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இன்னும் சில தினங்களில் நிலைமை சரியாகத் தொடங்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இதுபற்றி மத்திய அரசின்  உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அனைத்து சேவைகளுக்கும் பழைய ரூ.500,  ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க இயலாது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று  அறிவிக்கப்பட்ட போது, பெட்ரோல் பங்க், சுங்க சாவடி, ஆஸ்பத்திரி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நோட்டுகளை 11-ந்தேதி வரை மக்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த 3 நாள் அவகாசம் போதாது என்று தெரிய வந்ததால் 14-ந்தேதி வரை அதாவது இன்று வரை மேலும் 3 தினங்களுக்கு அத் தியாவசியத் தேவைகளுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று இரவுடன் அந்த  காலக்கெடு  முடிய இருந்தது.

இதனால் நாளை முதல் பெட்ரோல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், சுங்க சாவடி களில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த முடியாதே என்ற அச்சம் நாடெங்கும் ஏற்பட்டு இருந்தது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் பழைய ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் 24-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு இன்று காலை அறிவித்தது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெட்ரோல் நிலையங்கள், ஆஸ்பத்திரி களில் இன்னும் 10 நாட் களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாமானிய மக்கள் அடுத்த 10 நாட்களுக்கு பிரச்சினையின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...