உத்தரபிரதேசத்தில் ஒரு கிலோ உப்பின் விலை ரூ 200 முதல் 400 வரை

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் அம்மாநிலத்தில் ஒரு கிலோ உப்பு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.சில இடங்களில் ரூ 400 வரை விற்கபடுகிறது

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,இன்றே வாங்கி இருப்பு வைக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது எனவும் தகவல்கள் பரவின.

இதனால் பயந்து போன மக்கள் உப்பு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். உப்பு தட்டுப்பாடு குறித்த பயத்தினால் மக்கள் அதிகளவு உப்பை வாங்கிக் குவிப்பதை அறிந்த சில வியாபாரிகள், ஒரு கிலோ உப்பை 200 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளனர்.

வடக்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் லக்னோ, அலகாபாத், மொராதாபாத் ஆகிய இடங்களில் இந்த அநியாய விலைக்கு உப்பு விற்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் வெறும் வதந்தி எனவும், இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. ”உத்தரபிரதேசத்தில் உப்புக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை.உப்பை அதன் உண்மையான விலையைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்கக் கூடாது. இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.” என உத்தரபிரதேச காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவிய இந்த தகவலையடுத்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரான ஹெம் பாண்டே,”நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது வெறும் வதந்தி. மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

”சில பேர் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதாக புரளியை கிளப்புகின்றனர். இது முற்றிலும் தவறான தகவல்.” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் உப்பு வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அந்தந்த பகுதி காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...