வருமான வரித்துறை அதிரடி சோதனையில் இமாச்சலில் பதுக்கிவைத்திருந்த கோடிக்கணக்கான கறுப்புப்பணம் பறிமுதல்

இமாச்சலில் பல நகரங்களில் கருப்புப்பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் அதிரடி சோதனை நடத்தினர்.  இமாச்சலில் பல நகரங்களில் நடந்த இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 9ம் தேதி அறிவித்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மேலும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. வங்கி ஏடிஎம்களும் 2 நாட்கள் செயல்படாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் வங்கிகள் செயல்பட துவங்கின. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் விநியோகிக்கப்பட்டு வந்தன. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றி வந்தனர். ஏடிஎம்களில் ரூ.4000, வங்கிகளில் ரூ.10000க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதால் பலர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.

இதனிடையே கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள் அவற்றை நகைகளாக மாற்றுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து நாடு முழுவதும் தங்க, வைர கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லி சாந்தினி சவுக்கில் நகைக்கடை ஒன்றில் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 42 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்ததில் நகைக்கடைகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யுமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலில் பல நகரங்களில் கறுப்புப்பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இமாச்சலில் பல நகரங்களில் நடந்த இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி சோதனை மேலும் தொடரும் எனவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...