திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் செல்போனில் ஆபாச படம் பார்த்து ரசித்த கர்நாடக மந்திரி

பெங்களூர், கர்நாடகாவின் ரெய்ச்சூரில் இன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தன்வீர் சேட் மேடையிலேயே செல்போனில் ஆபாசபடம் பார்த்து உள்ளார். இதை அவருக்கு தெரியாமல் விழா நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த தனியார் டி.வி சேனல் ஒளிப்பதிவாளர் படம் பிடித்து விட்டார்.

இது தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த மக்கள்அதிர்ச்சி அடைந்தனர்.

மந்திரியின் செயலுக்கு மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீர் ஷெட் டர், ஈஸ்வர்யா, மதசார் பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன் மந்திரி தன்வீர் சேட் உடனடி யாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தினர்.

இதற்கிடையே தன்மீதான குற்றச்சாட்டை மந்திரி தன்வீர் சேட் அடியோடு மறுத் தார் “ விழா மேடை யில் இருந்த போது மாநிலம் முழுவதும் நடந்த திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா தொடர்பான புகைப் படங்களை செல்போனில் தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது எனது வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆபாசப் படங்கள் எதேச்சையாக வந்து சென்றன. நானாக நிர்வாணப்படங்களை தேடிப்பார்க்கவில்லை என்று கூறினார்.

மந்திரி நிர்வாணப்படம் பார்த்த விவகாரம் குறித்து அறிந்த முதல்-மந்திரி சித்தராமையா உடனடியாக டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு கண்டித்தார். இது குறித்து விளக்கம் கேட்டுள்ள அவர் உடனடியாக அறிக்கை அளிக்குமாறு உத்தர விட்டார்.

முந்தைய பா.ஜனதா ஆட்சியின் போதும் மந்திரி களாக இருந்த சி.சி.பட்டீல், கிருஷ்ணபாளேமர், லட்சுமணன் சவதி ஆகியோர் தங்களது செல்போனில் அழகிகளின் நிர்வாணப் படங்களை பார்த்து ரசித்தனர். இது கர்நாடக அரசியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 3 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...