மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி


புதுடில்லி: புதிய ரூபாய் நோட்டுகள் எடுப்பதற்காக கூட்ட நெரிசலை தவிர்க்க மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளன. இதனால் வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்ததை அடுத்து இன்று முதல் அனைத்து ஏடிஎம்-களும் பயன்பாட்டுக்கு வருகின்றன.

அந்த ஏடிஎம்-களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும். இதனால் சில தினங்களுக்கு ஏடிஎம்-களில் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், முக்கியமான ஏடிஎம்-களில் கூட்டத்தை தவிர்க்க மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்-களை 5 முறை வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கு தனிகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசு மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...