பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கிகளில் இன்று மாற்றிக் கொள்ளலாம்..!

சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒருநாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தால் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த ஒருநாள் விடுமுறையில், பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்தன. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட உள்ளன. மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு சிறப்பு கவுண்டர்களில் இன்று புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

ஏடிஎம் மையங்கள் இன்றும் விடுமுறை என்பதால், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், புதிதாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...